கரூர்: கரூர் அருகே திருகாம்புலியூர் பகுதியில், சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல இடங்களில் உள்ள இரும்பு தடுப்புகள் வளைந்த நிலையில் உள்ளன. இதனால், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகனங்களில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. உடைந்த இரும்பு தடுப்புகளை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.