மதுரை: மதுரையில் நேற்று இரவு சில மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வைகையாற்றில் கலந்தது. ஆற்றில் கழிவுநீரும் கலந்து சென்றது. இதனால், வைகை ஆற்றின் ஒரு பகுதி மற்றும் செல்லுர் பகுதியில் உள்ள கண்மாயில் விஷ நுரை மிதந்து வந்தது. பல அடி உயரம் அளவுக்கு பொங்கி வந்த நுரையானது, செல்லூர் பாலத்தின் மீதும் வந்தது. இதனால், அந்த பாலத்தின் மீது சென்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர். நுரையை தண்ணீர் பீய்ச்சி அடித்து கரைத்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.