பரமக்குடி: பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் இரண்டு குழந்தைகளை பெற்ற மனைவியை, நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
பரமக்குடி அருகே தினைக்குளம் கிராமத்தைச்சேர்ந்தவர் சங்கீதா, 24. பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி குமார், 34. இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஐந்து வயது பெண் மற்றும் இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளனர்.திருப்பதி குமார் மீது பல வழக்குகள் உள்ளதால் அடிக்கடி சிறை சென்று வந்துள்ளார்.மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அவர் தகராறு செய்துள்ளார். 27ம் தேதி இரவு இருவருக்கும் இடையே நடந்த தகராறில் மனைவியை தாக்கியதில் மயங்கி விழுந்து சங்கீதா இறந்தார். பரமக்குடி போலீசார் திருப்பதி குமாரை கைது செய்தனர்.