திருவாடானை: தொண்டி, எஸ்.பி.பட்டினம், புதுப்பட்டினம்உள்ளிட்ட பல ஊர்களில் புயல் காலங்களில்பொதுமக்கள் தங்கும் வகையில் புயல் காப்பகங்கள் கட்டப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையினரால் கட்டப்பட்ட இந்த புயல்காப்பகங்களில் ஜன்னல் கதவுகள் உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் புயல் ஏற்படும் போது பள்ளிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புயல் காப்பகங்களை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.