ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மக்களின் அச்சத்தைபோக்கும்விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் அணிவகுப்பு நடந்தது.டி.எஸ்.பி., வெள்ளத்துரை முன்னிலையில் அரண்மனை பகுதி, சாலைத்தெரு, வழிவிடுமுருகன்கோயில், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில ஐந்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் என 200க்கும் மேற்பட்ட போலீசார் அணி வகுப்பு நடத்தினர். விபத்து, குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியும், மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக மாதந்தோறும் அணிவகுப்பு நடைபெற உள்ளதாக போலீசார் கூறினர்.