புவனகிரி : புவனகிரி அருகே கொரோனா நோய் பாதித்து கணவர் இறந்ததால் சோகத்தில் இருந்த பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அருகே சுத்துக்குழி திம்மி ரெட்டிபாளையம் ஆர்வலன், 43; கொரோனா நோய் பாதித்து கடந்த அக்டோபர் மாதம் 28 ம் தேதி இறந்தார்.கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி கவிதா,38; நேற்று அதிகாலை வீட்டிலிருந்த மின் விசிறியில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கவிதாவின் மாமனார் கிருஷ்ணசாமி கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.