ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆபிரஹாம் தலைமையில் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதியிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நவ.,21, 22ல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெறப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளதை பார்வையாளர் ஆபிரஹாம் ஆய்வு செய்தார்.டி.ஆர்.ஓ., சிவகாமி, சப்கலெக்டர் சுகபுத்ரா, கலெக்டரின்நேர்முக உதவியாளர் கோபு, பரமக்குடி சப்கலெக்டர் தங்கவேல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.