சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த பேரூர், குமாரக்குடி, கூடலையாத்துார் ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பேரூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மண்டல வட்டார வளர்ச்சி அதிகாரி சுகுமார், பணி மேற்பார்வையாளர் லதா முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் நாகராஜன் வரவேற்றார். குமாரக்குடி ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, தலைவர் சாந்தி மாயக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கூடலையாத்துாரில் நடந்த கூட்டத்திற்கு ஜீவா ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் கட்டுமானப் பணிகளை துவங்கி விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.