கடலுார் : கடலுார் மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு செல்லாத நிலையில், படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிவர் புயல் காரணமாக கடலுார் மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.கடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடலுார் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில், சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளை புனரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படகுகளுக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.