திருமங்கலம்: திருமங்கலம் அருகே அச்சம்பட்டி ரோட்டில் பாலப்பணி நடக்கிறது. பாலத்தின் கீழ் பைப் லைன் மூலம் திரளி கண்மாய்க்கு மழை நீர் செல்லும்.தற்போது பாலப்பணியால் பைப் லைன் அடைக்கப்பட்டது. இதனால் மழை நீர் கண்மாய்க்கு செல்ல முடியாமல் வீணாகிறது.திரளி நீர் பாசன சங்கத் தலைவர் பிச்சை: 15 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மழைநீர் கண்மாய் நோக்கி செல்கிறது. ஆனால் அச்சம்பட்டி பாலத்தின் பணியால் கண்மாய்க்கு நீர் செல்லாததால் விவசாயிகள் பாசன வசதி இன்றி அவதிப்படுகின்றனர் என்றார்.