திருமங்கலம்: திருமங்கலத்தில் மழைக்கு பெரியகடைவீதியில் செயல்படாத கடை இடிந்தது. கடை முன் நிறுத்தப்பட்டிருந்த டிரைசைக்கிள் சேதமடைந்தது. குண்ணனம்பட்டி செல்லத்தாயி, சாரதா, தங்களாச்சேரி ரவி, அலப்பலச்சேரி முத்துராம், மச்சக்காளை, பொய்யாமலை, பாண்டி, புங்கங்குளம் பஞ்சு, வலையபட்டி வீரம்மாள் உட்பட 12 பேரின் வீடுகள் இடிந்தன.தாசில்தார் முத்துபாண்டியன் ஆய்வு செய்தார். தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.