அவனியாபுரம்: மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் ரித்திகா 8. மதுரை தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார். நேற்றுமுன்தினம் வில்லாபுரத்திலிருந்து டூவீலரில் இருவரும் வீடு சென்றனர். பாண்டியராஜன் ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் வந்த வேன் டூவீலரில் மோதியதில் ரித்திகா கீழே விழுந்தார். பின்னால் வந்த மற்றொரு சரக்கு வேன் ரித்திகாமீது ஏறியது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரித்திகா இறந்தார். பாண்டியராஜன் லேசான காயங்களுடன் தப்பினர். இரு வேன்களும் நிற்காமல் சென்றன. மதுரை நகர் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ஞானபிரபாகரன் விசாரிக்கிறார்.