அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சுடலைமுத்து மதுபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தும், கூடுதல் நகைகள் கேட்டும் துன்புறுத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு சுடலைமுத்து பாலில் எலிமருந்தை கலந்து மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். மூவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.கணவரின் இந்த செயலுக்கு அவரது தம்பி அய்யம்பெருமாள் உடந்தையாக இருந்ததாகமாலதி அவனியாபுரம் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.