மதுரை: வேளாண் அறிவியல் நிலையங்கள் விதை உற்பத்தி பணியில் ஈடுபட வேண்டும் என, மதுரை விவசாய கல்லுாரியில் நடந்த 12வது அறிவியல் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.மதுரை வேளாண் அறிவியல் நிலையம் நடத்திய கூட்டத்தில் வேளாண் பல்கலை விரிவாக்கக் கல்வி இயக்குனர் ஜவஹர்லால் தலைமை வகித்தார்.வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான சாகுபடி கையேட்டை வெளியிட்டார். ஐதராபாத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் (பொறுப்பு) பிரசாத் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், 'வேளாண்மை அறிவியல்நிலையங்கள் விதை உற்பத்தி பணியில் ஈடுபட வேண்டும். தொழில் முனைவோர் பயிற்சிகளைநடத்த வேண்டும்' என்றார்.ஆலோசனை குழு எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் செல்வி சமர்ப்பித்தார். சமுதாய அறிவியல் கல்லூாரிடீன் அமுதா, பேராசிரியர்கள் சாமிநாதன், துரைசிங், வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் கலந்து கொண்டனர்.