ஏற்காட்டில் கழிப்பிடம் கட்டியதில் பல லட்சம் மோசடி: பி.டி.ஓ., உள்பட 5 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
09:10

சேலம்: ஏற்காட்டில், தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் லட்சக்கணக்கில் நடந்த மோசடியில், தற்போது இடைப்பாடியில் பணிபுரியும் பி.டி.ஓ., உள்பட, 5 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.


சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியத்தில், மத்திய அரசு திட்டத்தில், தனிநபர் கழிப்பிடம் கட்டியதில், முறைகேடு நடந்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலி தலைமையில் போலீசார், ஒன்றிய ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில், 2017 - 18ல் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம், 1,713 கழிப்பிடம் கட்ட அனுமதிக்கப்பட்டதில், ஏற்காடு டவுனில் மட்டும், 43 கழிப்பிடம் கட்டாமலே, கட்டியதாக கணக்கு காட்டி, 2.58 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. அத்துடன், பயனாளிகளுக்கு, தலா, 12 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கக்கூறி, அத்தொகையை ஒரே, 'செக்' ஆக, ஒப்பந்ததாரர் சதாசிவம் பெயருக்கு வழங்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, அப்போதைய பி.டி.ஓ., சுஜாதா(கிராம ஊராட்சி), மண்டல துணை பி.டி.ஓ., செந்தில்குமாரி, பணி மேற்பார்வையாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் இளவரசன், ஒப்பந்ததாரர் சதாசிவம் ஆகியோர் மீது, போலி ஆவணம் தயாரித்தல், அதை, உண்மை ஆவணமாக பயன்படுத்தல், மோசடி, நம்பிக்கை துரோகம் உள்பட, 12 பிரிவில் வழக்குப்பதிந்து, மேல் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'புலன் விசாரணையில், மோசடி தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றனர். தற்போது, சுஜாதா இடைப்பாடியிலும், செந்தில்குமாரி காடையாம்பட்டி, சரவணன் ஓமலூர், இளவரசன் மேச்சேரியில் பணிபுரிகின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X