இடைப்பாடி: கொங்கணாபுரம் வாரச்சந்தையில், ஆடுகள் மூலம், 1.60 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், ஆட்டுச்சந்தை, நேற்று கூடியது. செம்மறி, வெள்ளாடு என, 2,500 ஆடுகளை, விவசாயிகள், வியாபாரிகள், விற்பனைக்கு கொண்டுவந்தனர். 10 கிலோ ஆடு, 6,100 முதல், 6,400 ரூபாய் வரை விலைபோனது. மொத்தம், 1.60 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது.