மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசன நீர் திறப்பை விட, கிழக்கு, மேற்கு கால்வாயில் கூடுதல் நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 8,111 கனஅடியாக இருந்த, அணை நீர்வரத்து, நேற்று, 7,013 கனஅடியாக குறைந்தது. டெல்டா மாவட்டங்களில், பரவலாக மழை பெய்ததால், பாசனத்துக்கு நீர்தேவை குறைந்தது. இதனால், அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு மட்டும் வினாடிக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், போதிய மழையில்லாததால், நீர் தேவை அதிகரித்தது. இதனால், வினாடிக்கு, 250 கனஅடி நீர் திறக்கப்பட்ட, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில், இரு நாளாக, 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.