கரூர்: கரூர் மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய, 1,032 ஓட்டுச்சாவடிகளில் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணி நடந்து வருகிறது. இதில், ஓட்டுச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, குளித்தலை எம்.எல்.ஏ., ராமர், மாநில சட்ட துறை இணை செயலாளர் மணிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.