ஸ்ரீவில்லிபுத்துார் : சென்னையிலிருந்து செங்கோட்டை வழித்தடத்தில் சலுகைகள் இல்லா சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு பதில் வழக்கம்போல் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கவேண்டும்.
இவ்வழித்தடத்தில் தினசரி கொல்லம், பொதிகை ரயில்களும், வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரசும் இயக்கபட்டு வந்தது. கொரோனா காரணமாக இந்த ரயில்கள் நிறுத்தபட்டு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது. இந்த ரயில்களில் முன்பதிவில்லாபெட்டிகள், செகன்ட் சிட்டிங் பெட்டிகளாக மாற்றப்பட்டு உள்ளது. அவசரமாக பயணிக்கும் பயணிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கான கட்டணசலுகைகளும் பெற முடியாததால் தென்மாவட்ட பயணிகள் பாதிக்கின்றனர்.
ரயில் பயணிகள் சங்க நிர்வாகி முனியப்பன்:
பொதிகை, கொல்லம், சிலம்பு ரயில்கள் இயங்கியபோது பயணிகளுக்கு பல சலுகைகள் கிடைத்தது. இந்த ரயில்கள் தற்போது சிறப்பு ரயில்களாக இயக்கபடுவதால் சலுகைகளை பெறமுடியவில்லை. வழக்கம்போல் இயங்கும் ரயில்களின் பெயர்களில் ரயில்களை இயக்க ரயில்வேத்துறை முன்வர வேண்டும், என்றார்.