கூடுவாஞ்சேரி : பாண்டூரில், மின்சாரம் பாய்ந்ததில், எருமை மாடு, இறந்தது.
கூடுவாஞ்சேரி அடுத்த, கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன், 60. இவர், தன் எருமை மாடுகளை, வயல்வெளி பகுதியில், மேய்த்து வருவது வழக்கம்.இதேபோன்று, பாண்டூரில், தனியார் கம்பெனி அருகில், வயல்வேலி பகுதியில், எருமை மாடுகளை, நேற்றுமுன்தினம், மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது, மின்வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பி, அறுந்து கிடந்தது.
இதை, ஒரு எருமை மாடு மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்தது. போலீசார், மாட்டை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.