ஆற்றில் வெள்ளம் வந்த பின் நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
ஆற்றில் வெள்ளம் வந்த பின் நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 நவ
2020
22:16

காஞ்சிபுரம் : ஆற்றில் வெள்ளம் வந்த பின், நீர் வரத்து கால்வாய் துார் வாரப்படுகிறது. முன்னதாக, இந்த பணி செய்திருந்தால், ஏரி நிரம்பி இருக்கும் என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.



காஞ்சிபுரம் அடுத்த, காவாந்தண்டலம் பகுதி ஏரிக்கு அருகில் உள்ள செய்யாற்றில் இருந்து, நீர்வரத்து கால்வாய் செல்கிறது. தடுப்பணைமாகறல்- - வெங்கச்சேரி இடையே செல்லும் செய்யாற்றின் குறுக்கே, புதியதாக கட்டப்பட்ட தடுப்பணை, கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.அணை கட்டிய பின், இந்த ஆண்டு முதல் முறையாக செய்யாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், நீரை தடுத்து அப்பகுதியிலுள்ள ஏரிகளுக்கு செல்லும் வசதி ஏற்பட்டுள்ளது.



நேற்று முன்தினம், செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், தடுப்பணையை தாண்டி தண்ணீர் சென்றது. தடுப்பணையில் இருந்து காவாந்தண்டலம் ஏரிக்கு, பொதுப்பணித் துறை சார்பில், தண்ணீர் திறந்து விட்டனர்.ஆனால், ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் புதர் மண்டி இருப்பதால், நீர் முறையாக செல்லவில்லை.இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுதோறும், அக்டோபர் மாத இறுதியில், வடகிழக்கு பருவ மழை துவங்கும் என, அதிகாரிகளுக்கு தெரியும். இருந்தும் இந்த ஆண்டு காவந்தண்டலம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் துார் வாரப்படவில்லை.



நீர்வரத்து குறைவுநேற்று முன்தினம், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின், தண்ணீர் திறந்து விட்டனர். ஆனால், தண்ணீர் செல்வதற்கான முறையான வழி இல்லாததால், ஏரிக்கு நீர்வரத்து மிக குறைவாக உள்ளது.முன்பாகவே நீர்வரத்து கால்வாயை சீரமைத்து இருந்தால், இந்த இரண்டு நாளில் வந்த தண்ணீருக்கு ஏரி முழுமையாக நிரம்பி இருக்கும். அவ்வாறு செய்யாமல் வெள்ளம் ஏற்பட்ட பின் கால்வாயை துார்வாரும் பணி நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X