உத்திரமேரூர் : 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு, அரிசி மற்றும் மளிகை பொருட்களை, அ.தி.மு.க., இளைஞரணி சார்பில், வழங்கப்பட்டது.
உத்திரமேரூர் அடுத்த, மானாம்பதி கூட்டு சாலையில், நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளன. 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அறிவுரை வழங்கினர். அதன்படி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி மாவட்ட செயலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் நடந்தது.இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் வி.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தலா, 25 கிலோ அரிசி, ஆறு விதமான மளிகை மற்றம் காய்கறி பொருட்களை, 100 குடும்பத்தினருக்கு வழங்கினார்.
மேலும், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் பொறியியல் படிப்புக்கு உதவுவதாக ஆர்.வி.ரஞ்சித்குமார் உறுதி அளித்து உள்ளார்.இந்த நிகழ்ச்சியில், கழக அமைப்பு செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றிய செயலர் தங்க. பஞ்சாட்சரம் உள்ளிட்ட பல அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.