கும்பாபிஷேகம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கம்பராஜபுரம் பகுதியில், தேர்கொண்டான் ஓடையில் அமர்ந்த நாகம்மன் கோவில் திருப்பணி நிறைவு பெற்று, நேற்று முன்தினம் அதற்கான கணபதி ஹோமம் நடைபெற்றது.நேற்று, காலை, 11:00 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதை தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு, மூலவர் அம்பாளுக்கு மஹா அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.மேலும் கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிமார்கள், பக்த ஆஞ்சநேயர், பத்ரகாளியம்மன், மற்றும் நாக பிம்பங்கள் பிரதிஷ்டை செய்து, பூஜை நடைபெற்றது.