விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில் கோலியனுார் அடுத்த மழவராயனுார் காலனியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமை தாங்கி, நிவாரண உதவிகள் வழங்கினார். தலா 5 கிலோ அரிசி 350 பேருக்கு வழங்கப்பட்டது.அகில இந்திய காங்., உறுப்பினர் ராமமூர்த்தி, நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் விஸ்வநாதன், காஜா மொய்தீன், சேகர் முன்னிலை வகித்தனர்.சேவாதள மாவட்ட தலைவர் ராஜேஷ், வட்டார தலைவர்கள் வெங்கடேசன், ரவி, சர்தார்கான், இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், வட்டார நிர்வாகிகள் ரங்கன், மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.