அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் சிறு பாலம் அமைக்கப்பட்ட சாலை பகுதியில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
மேல்மலையனுாரிலிருந்து வளத்தி செல்லும் வழியில் பி.டி.ஓ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகில் உள்ள ரோடில் மழை நீர் செல்வதற்கு வசதியாக சிறு பாலம் (கல்வெர்ட் )அமைக்கப்பட்டிருந்தது. கல்வெர்ட் பணிகள் செய்த இடங்களில் மட்டும் மழைக்கு முன்னரே ஜல்லிகள் பெயர்ந்திருந்தன.தற்போது பெய்த மழையினால் அதிகளவில் ஜல்லிகள் பெயர்ந்ததில், வாகன ஓட்டிகள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். வேகமாக வரும் பைக் ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி ஜல்லிகள் பெயர்ந்துள்ள இப்பகுதியில் பேட்ஜ் ஒர்க் செய்திட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.