கடலுார் : கடலுாரில் அதிகபட்ச மாக 22.6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கடலுாரில் கன மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலான மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு வருமாறு: கடலுார் கலெக்டர் அலுவலக பகுதியில் அதிகபட்சமாக 22.6 மி.மீ., மழை பெய்தது. வானமாதேவி 6, மே.மாத்துார் 5, பரங்கிப் பேட்டை 4.2, வடக்குத்து 4.0, கடலுார் 3.9, குறிஞ்சிப்பாடி 3.0, சிதம்பரம் 1.6, விருத்தாசலம் 1.3 மி.மீ., மழை பெய்துள்ளது.