விழுப்புரம் : விழுப்புரம், இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், கீழ்புத்துப்பட்டு பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கீழ்புத்துப்பட்டு பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் விழுப்புரம் கிளை செயலாளர் டாக்டர் சரவணராஜா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் திருமாவளவன், டாக்டர்கள் துரைமுருகன், லோகநாதன், அன்பரசன், கோபிநாத், சுகந்தி, ஜெயபிரசாத், இயன்முறை சிறப்பு மருத்துவர் லட்சுமி வாசன் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு, மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உமாபதி மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் கார்த்திகேயன், மணிகண்டன், அன்பு, திருமுருகன், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.