விழுப்புரம் : விழுப்புரம் நகரில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை தீப விழா நடந்தது.
விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் கோவில் வளாகத்தில் அகல் விளக்கு ஏற்றப்பட்டது. பின், கோவில் எதிரில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதே போன்று, திரு.வி.க., வீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் ரங்கநாதன் வீதியில் உள்ள சித்திவிநாயகர் கோவில், நேரு வீதி வீரவாழியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.