திருவெண்ணெய்நல்லுார் : தனி ஊராட்சியாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமம் அரசு ஆவணம், வரைபடம் இல்லாமல் சிதறிகிடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அரசு திட்டங்கள் பெறுவதில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்ற அக்கிராம மக்கள் முதலமைச்சர் பழனிச்சாமி, அமைச்சர் சண்முகம், எம்.எல்.ஏ., குமரகுரு மற்றும் தமிழக வருவாய்துறை ஆணையர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கருவேப்பிலைபாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்ற தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 14ந் தேதி அரசு ஆணை வெளியிட்டது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அக்கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர் பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலுார் மாவட்டம் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு, கடலுாரிலிருந்து - மடப்பட்டு வழியாக சென்ற முதல்வருக்கு கருவேப்பிலைபாளையம் மீட்புக்குழு இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.