கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் விஜயகுமார், 23; இவரது மனைவி சுபாஷினி. இருவரும் காதலித்து கடந்த செப்டம்பர் 17ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த விஜயகுமாரை, அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஜயகுமார் வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சேலையால் விஜயகுமார் துாக்குபோட்டு இறந்தது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.