மயிலம் : மயிலம் பகுதியில் 'நிவர்' புயல் மழை சேதங்களை ஆரணி எம்.பி., பார்வையிட்டார்.
மயிலம் சட்டசபை தொகுதியில் உள்ள ரெட்டணை, நாரேரிக்குப்பம், நாணல்மேடு பகுதிகளில் 'நிவர்' புயலால் பெய்த கன மழையால் நெல், வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. இவற்றை ஆரணி லோக்சபா தொகுதி எம்.பி., விஷ்ணுபிரசாத் நேரில் பார்வையிட்டார். பின்னர் நாணல்மேடு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 25 பழங்குடியின குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் மகாலட்சுமி, வேளாண்மை அலுவலர் ஆனந்தன், ஊராட்சி செயலாளர் சிவக்குமார், விழுப்புரம் மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் கருணாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.