ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பா.ஜ., சார்பில், சக்தி கேந்திர கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நரசிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முரளிதரன் பேசினார்.ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பது, மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், ஆவாஸ் யோஜனா, முத்ரா திட்டம் உள்ளிட்ட பா.ஜ., அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்தப்பட்டது.