பரமக்குடி : பரமக்குடி காக்கா தோப்பு வைகை ஆற்றுப் பகுதியில் நேற்று காலை 5:00 மணிக்கு வாலிபர் பிரசன்னா,30 உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.காந்திஜி ரோட்டைச் சேர்ந்த இவர் அரிசி கடை நடத்தி வந்தார். அருகில் உள்ளவர்கள் மீட்ட நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இவர் நண்பர் ஒருவருக்கு சிபாரிசு செய்து பணம் வாங்கிக் கொடுத்ததாகவும், அவர் திருப்பி கொடுக்காததால் மன உளைச்சலில் தீக்குளித்தது தெரியவந்துள்ளது. எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.