ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 39 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, புகையிலை பொருட்கள் விற்போர் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.நேற்று முன்தினம் ஒரே நாளில் ராமநாதபுரம் பஜார், டவுன், கேணிக்கரை போலீசார் ஏழு பேரை கைது செய்தனர். பரமக்குடி, எமனேஸ்வரம், சத்திரக்குடி, பார்த்திபனுார், அபிராமம், நயினார்கோவில், பாம்பன், ராமேஸ்வரம் உச்சிப்புளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 பேர் கைது செய்யப்பட்டனர்.