வேண்டும் புதைமின்வடம்: பாதையை மறிக்கும் எச்.டி.,லைன் டவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

30 நவ
2020
18:20
பதிவு செய்த நாள்
நவ 30,2020 00:00

நவஇந்தியா ரோட்டில், நுாறடி ரோடு பாலம் முடியுமிடத்தில் உள்ள, எச்.டி.,லைன் டவர்களை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, 3 துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.


கோவை நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றை தொலைநோக்குடனும், மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைக்காமல், அவசரகதியில் கட்டுவதாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.உதாரணமாக, காந்தி புரம் மேம்பாலத்தில் ஏறுதளம், இறங்குதளம் இல்லாததால் அதன் பயன்பாடு குறைவாகவுள்ளது. பாலம் கட்டியபின்பும், காந்தி புரம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.



இதே போன்று, நுாறடி ரோடு பாலமும் வடிவம் மாற்றப்பட்டு, மிகவும் உயரமாக அமைக்கப்பட்டதாக, சர்ச்சை கிளம்பியது.இதனால்தானோ என்னவோ, புதிதாகக் கட்டப்படவுள்ள, அவிநாசி ரோடு உயர்மட்ட மேம்பாலம் வடிவமைப்பு வரைபடம் குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்படுகின்றன.


இந்நிலையில், கோவை கலெக்டர் ராஜாமணி தலைமையில், மாவட்ட சாலை பாதுகாப்பு குழுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் பேசுகையில், ''அனைத்து வளர்ச்சிப் பணிகளையும், இன்னும் விரைவுபடுத்த வேண்டும். அவினாசி ரோடு மேம்பாலப் பணியை, ஒரே நேரத்தில் எல்லாப் பகுதிகளிலும் செய்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால் பகுதி பகுதியாக, பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன், திருச்சி ரோடு மேம்பாலத்தை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும்,'' என்றார்.


இதில், நுாறடி ரோடு பாலத்திலிருந்து, நவ இந்தியா சந்திப்பு வரையிலான ரோட்டை விரிவு படுத்துவது பற்றியும் பேசப்பட்டது. நுாறடி ரோடு பாலம் முடியுமிடத்தில், ரோட்டின் பெரும்பகுதியை, எச்.டி. லைன் டவர் ஆக்கிரமித்துள்ளதால், அங்கு ரோடு மிகவும் குறுகலாகி விடுகிறது. இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் அதை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று, குழு உறுப்பினர் கதிர்மதியோன் குற்றம்சாட்டினார்.


பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியில் மட்டும், எச்.டி., லைன் புதைமின்வடமாக மாற்றப்பட்டுள்ளது. அதை அவிநாசி ரோடு நவஇந்தியா சந்திப்பு வரை, புதைமின் வடமாகவே கொண்டு சென்று, இந்த டவர்களை அகற்ற வேண்டுமென்று, பல கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார். அதேபோன்று, அந்த ரோட்டிலுள்ள 'Z' வடிவில் உள்ள வளைவுப் பகுதியையும் விரிவுபடுத்த வேண்டுமென்று கோரினார்.


இதை ஒப்புக்கொண்ட கலெக்டர், ''மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இணைந்து அந்த இடத்தை ஆய்வு செய்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கை தர வேண்டும். அங்கு புதைமின் வடம் அமைப்பது குறித்தும், மின் வாரியம் முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.மேலும் அவர், ''இது முக்கியமான பணி.


இத்திட்டத்துக்கு தேவையான ஐந்து கோடி ரூபாயை அரசிடம் பெற்று, இந்த பணியைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் நான் செயலரிடம் பேசி, அனுமதியும் நிதியும் வாங்கித் தருகிறேன்,'' என்றார்.அந்த ரோட்டில் உள்ள, 'Z' வடிவில் உள்ள வளைவுப் பகுதியை, விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உறுதியளித்தார்.


பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!கிடைத்தது ஒப்புதல்!


காந்திபுரம் பாலத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் வகையில், பார்க் கேட் அருகில் ஏறும் பாலத்தில், 100 அடி ரோடு சந்திப்பு அருகில் ஓர் இறங்குதளமும், சத்தி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், காந்திபுரம் சந்திப்பில் இடது புறமாக, எஸ்.இ.டி.சி பஸ் ஸ்டாண்ட் அருகில் இறங்கும் வகையில், ஓர் இறங்குதளமும் அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.மொத்தம் ரூ.25 கோடி ரூபாய் செலவில் இந்தப் பணிகளை மேற்கொள்ள, அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக, சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


--நமது நிருபர்-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X