விருதுநகர் : மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களில் மீன் வளர்த்து பயன்படுத்த மீன் வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கலெக்டர் கண்ணனை தலைவராக கொண்டு இயங்கி வரும் மாவட்ட மீன் வளர்ப்போர் முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன குளங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு (2020-2025) மீன் வளர்த்து பயன்படுத்த குத்தகை அடிப்படையில் உரிமம் வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது.இதன்படி தெற்கு வெங்காநல்லுார் கூனங்குளம், குலசேகரபேரி, தெய்வத்திக்குளம், கொல்லங்கொண்டான் குமிட்டிகுளம்,செங்குளம், இளந்திரை கொண்டான் பெரியகுளம், நல்லமங்கலம், சேத்துார் ஓடைக்குளம், கடன்பன்குளம், வடக்கு வெங்காநல்லுார் பிரண்டைக்குளம், அப்பனேரி, கந்தரராஜபுரம் குறவன்குளம், அயன் கொல்லங்கொண்டான் வத்திரபேரி, சோலைசேரி அரியனேரி, கொல்லங்கொண்டான் சேந்தனேரி ஆகிய பாசன குளங்களின் குத்தகை அடிப்படையில் மீன் வளர்த்து பயன்பெற டிச.,7ல் ஏலம் நடக்கிறது.
ராமலிங்காபுரம் பேராநல்லுார், பழையமேலாண்மறைநாடு, தென்கரை, வடகரை, ராஜபாளையம் மருங்கூர், திருச்சலுார், கொண்னேரி, அலப்பச்சேரி, மேட்டுப்பட்டி கணபதிகுளம், சோலைசேரி மன்னார்முடி ஆகிய பாசன குளங்களுக்கு டிச.,8ல் ஏலம் நடக்கிறது. தொடர்புக்கு 04562 244 707.