போடி : போடி நாகலாபுரம் அருகே கரட்டு மேல் உள்ள மல்லிங்கேஸ்வரர் கோயிலுக்கு மகா தீபம் ஏற்றுவதற்காக பக்தர்களுடன் சென்ற போலீஸ், வனத்துறையினர் உட்பட 7 பேர் மலைத்தேனீ கொட்டியதில் படுகாயம் அடைந்தனர்.
திருக்கார்த்திகையையொட்டி நேற்று சுற்று கிராம பகுதி பக்தர்கள் கோயிலுக்கு சென்றபோது கரட்டின் அடிவாரத்தில் உள்ள மரப்பொந்தில் கட்டியிருந்த மலைத்தேனீ கூட்டை கல்லால் எரிந்து கலைத்தனர். வெளியே வந்த தேனீக்கள் பக்தர்களை கொட்ட வந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையை சேர்ந்ததெய்வேந்திரன் 41, ருத்ரமூர்த்தி 24, போடி தாலுகா போலீசார் சதீஸ் 30, ஸ்ரீகலா 29, ஊர்க்காவல் படையை சேர்ந்த கார்த்திகேயன் 23, விஜயகுமார் 24, ஆனந்த் 29, ஆகிய 7 பேர் பக்தர்களை காப்பாற்ற முயன்றபோது அவர்களை தேனீக்கள் கொட்டியது. 7 பேரும் முகம் வீங்கிய நிலையில் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.