தேனி : ஆண்டிபட்டி அருகே பாலகோம்பை வி.ஏ.ஓ., நாகராஜன் பழையக் கோட்டை பகுதிக்கு அலுவலர்களுடன் சென்றார். சுந்தரராஜபுரம் மேலத்தெரு பெரியாண்டவர் 22, வடக்குத்தெரு பவளக்கடல் 25, சிவக்குமார் 28, ஆகியோர் அங்குள்ள செல்லக்காளை என்பவரின் பட்டா நிலத்தில் இயந்திரம் மூலம் டிராக்டரில் மண் திருடினர். அலுவலர்களை பார்த்ததும் தப்பி ஓடினர். ராஜதானி போலீசார் மூவரையும் கைது செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.