தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 10 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.தேனி அருகே தப்புக்குண்டு நடுத்தெரு 36 வயது ஆண், குப்பிநாயக்கன்பட்டி பள்ளித்தெரு 18 வயது வாலிபர், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி கோவிந்தன் கோயில் தெரு 60 வயது மூதாட்டி, மஞ்சக்குளம் 35 வயது ஆண் ஆகிய 4 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 152 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.