திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஜலட்சுமி உத்தரவிட்டார்.
திண்டுக்கல் தி.மு.க., நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் அருண்குமார். கடந்த அக்.22 ம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதில் ஜார்ஜ், பிரான்சிஸ் உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இவ்வழக்கில் மேலும் 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி.,ரவளிப்பிரியா, கலெக்டரிடம் பரிந்துரைத்தார். நேற்று எரமநாயக்கன்பட்டி கருப்புசாமி 24, மேட்டுப்பட்டி விக்னு என்ற விக்னேஷ் 26, ஆரோக்கியமாதா கோயில் தெரு ஸ்டாலின் ஜோசப் 35, சின்னாளபட்டி பாலசந்தர் 22 ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.