பொங்கலுார்:கிராமப்புறங்களில் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக மக்கள் மறந்து விட்டதால், தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று துவங்கியது முதல், அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருமணம், காதுகுத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மேல் கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. அதிகமானோர் கூடுவதால் தொற்று பரவல் அதிகரிக்கும் என, சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர்.துவக்கத்தில், கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணித்த அரசு துறை அதிகாரிகள், கண்டும் காணாமல் விட்டு விட்டனர். தற்போது திருமணம், காதுகுத்து, வளைகாப்பு, கிடாவெட்டு என்று பல்வேறு விசேஷங்களை பொதுமக்கள் நடத்துகின்றனர். இதற்கு சொந்த பந்தங்களை அதிகளவில் அழைத்து விருந்து வைக்கின்றனர்.திருமண மண்டபங்களில் ஏராளமானோர் கூடுகின்றனர். யாரும் மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை. அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. எனவே, தொற்றுப்பரவல் குறித்த விழிப்புணர்வையாவது, அதிகப்படுத்த, அரசு துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.