திண்டுக்கல் :திண்டுக்கல்லில் ரெடிமேட் விளக்குகள் வருகையால், மண்ணால் ஆன கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
திண்டுக்கல், நத்தம், நொச்சிஓடைப்பட்டி, பழநியில் தீப விளக்குகள் குடிசைத் தொழிலாக தயாரிக்கப்படுகிறது. கஜலட்சுமி, அணையா விளக்கு என ஏராளமான வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. கொரோனாவால் பண்டிகைகள் கொண்டாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.மெழுகு, பீங்கானால் ஆன ரெடிமேட் விளக்குகளின் வருகையால் மண்ணால் ஆன விளக்குகளின் விற்பனை மந்தமாகியுள்ளது. வீடுகளுக்கும் ரெடிமேட் விளக்குகளேயே வாங்கிச் செல்கின்றர்.வியாபாரி செந்தில்முருகன் கூறுகையில்,' வழக்கமாக 10 ஆயிரம் விளக்குகள் விற்கும் இடத்தில் 6000 கூட விற்கவில்லை. இந்தாண்டு 40 சதவீதம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது', என்றார்.