குஜிலியம்பாறை : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் குஜிலியம்பாறை தளிப்பட்டி விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.நிலைய தலைவர் பொன். மணிவேல் தலைமை வகித்தார். முதன்மை விஞ்ஞானி குமரேசன், முனைவர் வெங்கடேசன் ஆகியோர் உழவியல், பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினர். தொழில்நுட்ப அலுவலர்கள் முருகானந்தம், அண்ணாதுரை பங்கேற்றனர். ஏற்பாடுகளை பண்ணை மேலாளர் ராஜேந்திரன் செய்தார்.