நகை, பணம் திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2020
01:16

தாராபுரம் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் வீரமணி, 43; கிரில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகன், கோவையில் படிக்கிறார். அங்கு, வாடகை வீட்டை ஏற்பாடு செய்து, கடந்த, 27ம் தேதி குடும்பத்துடன், அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, நேற்று மதியம் தன் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே இருந்த, 17 சவரன் நகை மற்றும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றது, தெரிந்தது. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ்சில் பணம் திருட்டுதேனி மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுளா, 45. திருமணமாகி குடும்பத்துடன் ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு, சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக, ஆந்திராவில் இருந்து தேனி சென்ற மஞ்சுளா, உறவினர்களுக்கு திருமணம் பத்திரிக்கை கொடுத்தார். பின் காங்கயத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல, தாராபுரம் வந்து, பஸ் ஏறியுள்ளார். அப்போது, கை பையில் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் திருடு போயுள்ளது. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தப்பிக்க உதவியருக்கு சிறைஅவிநாசி, அய்யம்பாளையம் சின்ன ஓலப்பாளையம் பகுதியில் வசிக்கும் தனபால், 19 என்ற இளைஞர், 16 வயது சிறுமியை திருமணம் செய்ய முற்பட்டதாக, அவிநாசி அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞர் தலைமறைவானார். அவர் தப்பிக்க உடந்தையாக இருந்ததாக கூறி, வி.சி., கட்சியின் ஒன்றிய செயலாளர் மாரிசாமி என்பவரை, அவிநாசி போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X