நிலக்கோட்டை : விளாம்பட்டி பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.
ஊரடங்கு தளர்வு ஏற்பட்டவுடன் அனைத்து பகுதிகளுக்கும் வத்தலக்குண்டு, மதுரை, வாடிப்பட்டி, உசிலம்பட்டி டிப்போக்களில் இருந்து 60 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு முன்பு திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், ஏத்திலோடு, அணைப்பட்டிக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.தற்போது காலை, மாலை இரு வேளை மட்டுமே ஒரு அரசு பஸ் வந்து செல்கிறது. மதுரை, உசிலம்பட்டி, சோழவந்தான், தேனூர், துவரிமான், மேலக்கால் பகுதிளுக்கு விவசாயிகள் செல்ல முடியவில்லை. பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும்.