பொள்ளாச்சி:கோவை மாவட்டம் குடும்ப நலத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம், கடந்த, 28ம் தேதி துவங்கி, டிச., 4ம் தேதி வரை நடக்கிறது.பயிற்சி பெற்ற டாக்டரால், ஐந்து நிமிடங்களுக்குள் கருத்தடை செய்யப்படும். 100 சதவீதம் பாதுகாப்பானது. எப்போதும் போல கடினமான வேலைகளை செய்யலாம். அரசு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத இந்த முறையை ஏற்க தகுதி வாய்ந்த ஆண்கள் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு, 98655 94122, 97885 47625 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என, குடும்ப நல பணிகள் துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.