மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கணியூரில், செப்டிக் டேங்கில் விழுந்த மாட்டை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.கணியூர் புதுார்மடம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், கால்நடைகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்கு சென்ற இவரது மாடு, அப்பகுதியில் இருந்த, செப்டிக் டேங்கில் தவறி விழுந்து விட்டது. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், செப்டிக் டேங்க் ஆழம், 10 அடிக்கும் கூடுதலாக இருந்த காரணத்தால், அதை வெளியில் கொண்டு வர முடியவில்லை.இதனால், உடுமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த துறையினர், சிறிது நேர போராட்டத்துக்குப்பின், மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.