மதுரை ; மதுரை பைபாஸ் ரோடு கிரீன்லீவ்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் வசிப்பவர் விக்னேஸ்வரன்.இவர் தனியார் நிறுவன மருத்துவ விற்பனையாளர். தீபாவளிக்காக வாங்கிய பட்டாசுகளில் மீதமுள்ளதை நேற்று கார்த்திகை தினத்தையொட்டி அவரது குழந்தைகள் நேற்று வெடித்தனர்.
இதில் ஏற்பட்ட தீப்பொறி அருகில் சானிடைசர் பெட்டியில் விழுந்து அதிக வெடி சத்தத்துடன் தீப்பற்றியது. விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தால் அச்சமுற்ற குடியிருப்போர் வீடுகளிலிருந்து வெளியேறினர். போலீசார் விசாரிக்கின்றனர்.