புறவழிச்சாலையை மறந்த கனரக வாகனங்கள்: அத்துமீறலால் நகருக்குள் நெரிசல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2020
01:37

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கிழக்கு புறவழிச்சாலையை புறக்கணித்து, நகருக்கும் நுழையும் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.பொள்ளாச்சி நகரில் நுழையும் சரக்கு மற்றும் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.


கோவை ரோடு - பல்லடம் ரோடு - தாராபுரம் ரோடு மற்றும் உடுமலை ரோட்டை நகருக்கு வெளியே இணைக்கும் வகையில், கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.கோவை ரோடு, குள்ளப்பாபாளையம் பிரிவில் இருந்து, குள்ளக்காபாளையம், தொப்பம்பட்டி, அனுப்பர்பாளையம், திப்பம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக, 15 கி.மீ., தொலைவுக்கு, 20.63 கோடி ரூபாய் மதிப்பில், இந்த ரோடு அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த கிராம ரோடுகளை அகலப்படுத்தி, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.கடந்த, 2018 மார்ச் பயன்பாட்டுக்கு வந்தது. இத்தனை செலவழித்து ரோடு அமைத்தும், திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. புறவழிச்சாலை ஏகப்பட்ட வளைவுகள், கிராமங்களின் வழியே செல்வதால், வழி தவற விடும் குழப்பங்கள் நிலவுவதால், பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் இந்த ரோட்டை புறக்கணிக்கின்றனர்.


வழக்கம் போல, பொள்ளாச்சி நகருக்குள் நுழைந்து செல்லவே விரும்புகின்றனர். அப்படி நகரில் நுழையும் கனரக மற்றும் சரக்கு வாகனங்களால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.புறவழிச்சாலை துவங்கும் பகுதிகளில், அந்தந்த பகுதி போலீசார் கண்காணித்து, லாரி, கன்டெய்னர், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை புறவழிச்சாலையில் திருப்பி விட வேண்டியது அவசியம்.தீபாவளி பண்டிகை சமயத்தில், நகரில் நெரிசலை தவிர்க்க, இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். அதேபோன்று, ஆண்டு முழுக்க செய்தால் மட்டுமே, புறவழிச்சாலை அமைத்த நோக்கம் நிறைவேறும்; பொள்ளாச்சி நகரம் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X