பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் ஹிந்து குடும்பங்களை சந்தித்து, 'தேசியம் காக்க... தமிழகம் காக்க' கையேடு வினியோகம் செய்யும் பணியில், நகர பா.ஜ.,வினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் ஹிந்துதர்மத்துக்கு எதிரானவர்களை அடையாளம் காட்டவும், ஹிந்துக்களிடையே ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்நோக்கிலும், தெய்வீக தமிழக சங்கம் துவங்கப்பட்டுள்ளது.இந்த சங்கம் சார்பில், கடந்த, 20ம் தேதி முதல் வரும் டிச., 6ம் தேதி வரை தமிழகம் முழுக்க உள்ள, 1.5 கோடி ஹிந்துக் குடும்பங்களை நேரடியாக சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாடி, 'தேசியம் காக்க... தமிழகம் காக்க' என்ற கையேடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், தன்னார்வலர்கள், ஹிந்து அமைப்பினர், பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சியில், பா.ஜ., சார்பில் கட்சியின் நகரத்தலைவர் மணிகண்டகுமார் தலைமையிலான பா.ஜ., நிர்வாகிகள், நகராட்சி பகுதிகளில் வசிக்கும் ஹிந்துக் குடும்பங்களை சந்தித்து, கையேடு வினியோகித்து, ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசி வருகின்றனர். ஹிந்துக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நேற்று, ராஜா மில் ரோடு, கூட்ெஷட் ரோடு, ஏ.பி.டி., ரோடு பகுதியில், கையேடு வினியோகம் நடந்தது. நகரில் உள்ள அனைத்து ஹிந்து குடும்பங்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக,நகர பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.